Wednesday, June 30, 2010
PAAVATTAKUDI SIVAALAYAM
பாவட்டகுடி அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத சுந்தரேச்வர சுவாமி திருக்கோயில்
நன்னிலம் வட்டம்
திருவாருர் மாவட்டம்
இந்த ஊரின் ஆலயம் பற்றி:
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவில்லை
கண்ணில் நல்லது உறும் கழுமல வளநகர்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே .
ஆழித்தேர் ஓடும் சிறப்பை ஒருங்கேயும் கமலாலயத்தை தன்னிடத்தே கொண்டதும் ஆதிபரம் பொருளாகிய சிவபெருமானின் நிழலாக இருந்த சுந்தர பெருமான் நடமாடிய திருவாருரின் வடகிழக்கே , ருத்ரத்தை முழு நேரமும் ஜபம் செய்து முக்தி அடைந்த உருத்ரபசுபதி நாயனாரின் அவதாரதலமான திருத்தலையூறின் அருகில் உள்ளது தான் நம் பாவட்டகுடி கிராமம் ஆகும்.
இந்த சுந்தரேச்வர சுவாமி ஆலயமானது 03 -04 -1132 அன்று கட்டப்பட்டதாக செய்திகள் செவி வழியாக தெரிகின்றது.
அதுவும் ஒரு ருசிகரமான விஷயமாகவே உள்ளது.
அந்த சமயத்தில் வளையல் விற்கும் வணிகன் இங்கிருந்த மாந்தோப்பில் களைப்பின் காரணமாக அயர்ந்து உறங்கியதாகவும்,அப்போது ஒரு பாம்புபுற்றின் மேல் தலை வைத்து படுத்திருந்ததாக சொல்லப்படுகின்றது.அந்த வியாபாரி கண் விழித்து பார்த்தபோது சிவகாமசுந்தரி அப்படியே காட்சி தந்தாளாம்.தாதர்கள் என அழைக்கப்பட்ட அந்த சமூகத்தினர் தான் கட்டியதாக அறியப்படுகின்றது
பிற்காலத்தில் தான் இரண்டாம் ராஜேந்திர சோழன் 1239 ஆண்டில் கல்திருப்பணியாக அறிகின்றோம்.
ஒருகாலத்தில் நிறைய வேத விற்பன்னர்களும் அறிஞர்களும் இருந்து போற்றி புகழ்ந்த அருள்மிகு சுந்தரேஸ்வரர் ஆலயம் காலபோக்கில் முழுதும் சிதிலமாயிற்று.அதன் படங்களை இந்த வலயதலத்தில் தந்துள்ளோம்.
மேலும் அகஸ்திய மகரிஷி இங்கு வழி பட்டு அதன் ஞாபகமாக விநாயகரின் பெயரும் அகத்திய விநாயகர் என்றே வழங்கலானது .
இந்த ஆலயத்தில் கோரக்க மகரிஷியும்,தன்வந்திரி மூர்த்தியும் இன்றும் வந்து பூஜைகள் செய்வதாக நம்பவைக்கும் வகையில்
நிகழ்ச்ச்சிகள் உணர்த்துகின்றன.இங்கு உள்ள அர்ஜுன ராசு என்ற ஏழாம் வகுப்பில் பயிலும் சிறுவன் மூலமாக தெய்வீக நிகழ்ச்சிகளெல்லாம் உணரப்படுகின்றது.காரணம் சாதாரண அதிகம் இறை நிலையிலே தொடர்பு இல்லாத குடும்பத்தை சேர்ந்த அந்த சிறுவன் மூலம் பல நல்ல வழிகாட்டலைஇவ்வூர் ஜனங்கள் பெற்றுள்ளனர்.கும்பாபிஷேகம் சமீபத்தில் நடைபெறாத நிலையில் எப்போது செய்யமுடியும் என்ற ஐயத்தில் இருந்த திருப்பணி குழு 27 -08 -2010 ஆவணி பதினொன்றாம் தேதி என குறிப்பிட்டு கொடுத்ததும் அந்த சிறுவன் மூலமாகவே இந்த .அருளாளர்கள் செய்தனர் .அதன் பயனாகவே நாம் எல்லோரும் பாவட்டகுடி திருப்பணிகளை விரைந்து செய்ய இறையருள் கூடிஉள்ளது
இவ்வாலய சிறப்புக்கள்:
மூர்த்தி:அருள்மிகு சுந்தரேஸ்வரர்.
தலம்:த்யாகவிநோதனல்லூர் என்ற பாவட்டகுடி
தீர்த்தம்:அகஸ்திய தீர்த்தம்
விருக்ஷம்:நாகலிங்கமரம்.
தொலைபேசி தொடரபுக்கு:
சிவத்திரு சிவகுமார்.வை.0436623382
Mobile9003667748
CHENNAI CONTACT :NANMANGALAM SIVAAYNAMAHA,9884126417
KUMBAKONAM CONTACT S.LAKSHMINARAYANAN.9443714218
MORE ON
http://paavattakudi.blogspot.com